Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தோனிக்கு மறுக்கப்படும் வாய்ப்பு – தென் ஆப்பிரிக்கா தொடரிலும் நோ !

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (09:03 IST)
செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி 20 தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பைக்குப் பிறகு நடந்துகொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரானத் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் தோனி ராணுவத்தில் இரண்டு மாதம் பணியாற்றும் முடிவை எடுத்து தற்போது காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அடுத்த மாதம் தொடங்க தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி 20 தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் முதலில் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சுழற்சி முறையில்  வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்ந்து தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தோனி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments