Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்ணனையாளர்களுக்கு தீனி போடக்கூடாது: வெற்றிக்கு பின் தோனி...

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (13:12 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் சென்னை ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என எதிர்ப்புகள் எழுந்தது. 
 
ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி, நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. இரண்டு வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே சென்னையில் விளையாடியது. இந்த போட்டியில் சிஎஸ்கே திரில் வெற்றி பெற்றது. 
 
வெற்றிக்கு பின்னர் இது குறித்து சென்னை அணி கேப்டன் தோனி பின்வருமாறு பேசியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்து இங்கு வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது. முதல் இன்னிங்ஸ், 2வது இன்னிங்ஸ் இரண்டுமே ரசிகர்களுக்கு தகுதியான இன்னிங்ஸ்களே.
அனைவருக்கும் உணர்ச்சி மட்டங்கள் உண்டு. என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது, ஆனால், நான் என் உணர்வுகளை ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன். வெளியில் அமரும்போது கிடையாது. 
 
களத்தில் நம் உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு அது இடம் கொடுத்துவிடும். சாம் பிலிங்ஸ் இப்படி ஆடிப்பார்ப்பது நன்றாக இருக்கிறது. இரு அணி பவுலர்களுக்கும் கஷ்ட காலம்தான். ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments