Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா உச்சத்தின் போது இந்தியாவில் இருந்த அனுபவம்… டேவிட் வார்னர் பகிர்வு!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (09:05 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது ஐபிஎல் விளையாடியது எப்படி இருந்தது எனக் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை உலகக்கோப்பை டி 20 போட்டிக்கு முன்னர் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றிருந்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது என டேவிட் வார்னர் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் ‘தொலைக்காட்சியில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. கொரோனாவால் இழந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உடலுடன் மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்திருக்கிறோம். மனிதாபிமான பார்வையில் மிகவும் வருத்தமாகவும், திகிலாகவும் இருந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments