Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் வெற்றியை தவற விட்ட தமிழ் தலைவாஸ்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (22:47 IST)
புரோ கபடி போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரே ஒரு புள்ளியில் வெற்றியை பறிகொடுத்தது.



 
 
ஏற்கனவே பெங்களூர் அணியுடன் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் டெல்லி அணியுடன் மோதியது.
 
ஆரம்பத்தில் இருந்தே இரண்டு அணிகளும் ஓரிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டம் முடிவதற்கு ஒரே ஒரு நிமிடம் முன்பு வரை தமிழ் தலைவாஸ் அணி தான் ஒரு புள்ளி அதிகம் இருந்தது.
 
ஆனால் கடைசி ரைடில் திடீரென இரண்டு புள்ளிகள் எடுத்த டெல்லி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் 5 போட்டிகள் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றியும், ஒரு டிராவும், மூன்று தோல்வியுடன் 7 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

சச்சின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… செய்வாரா?

இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments