Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை கால்பந்து: சொந்த மண்ணில் ரஷ்யா தோல்வி, அரையிறுதிக்கு சென்றது குரோஷியா

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (07:12 IST)
உலகக்கோப்பை கால்பந்து கடைசி காலிறுதி போட்டியில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. சொந்த மண்ணில் விளையாடுவதாலும் அரையிறுதிக்கு பெறவும் கடுமையாக போராடிய ரஷ்யா, கடைசியில் பெனால்டி ஷீட் முறையில் தோல்வி அடைந்து வெளியேறியது.
 
நேற்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் கோல் அடிக்க திணறினர்.  இருப்பினும்  ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை வகிக்க உதவினார்.
 
ஆனால் இந்த கோலுக்கு பதிலடியாக அடுத்த எட்டே நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்து போட்டியை 1-1 என சமனிலைப்படுத்தினார்.
 
இதன்பின்னர் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தன் பின்னர் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெனால்ட்டி ஷூட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் குரோஷியா 4 கோல்களும், ரஷ்யா 3 கோல்களும் போட்டதால் 4-3 என்ற கோல்கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments