Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் கடவுளுக்கு இன்று பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து மழை

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (17:07 IST)
நம் நாட்டின் தேசிய விளையாட்டாக ஹாக்கி உள்ளது. ஆனால் பலகோடி இளைஞர்களின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும்தான்.
அதிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சுனில் கவாஸ்கர், கபில்தேவ்விற்கு பிறகு உலக அரங்கில் கிரிகெட் விளையாட்டில் தன் திறமையால் புகழ்பெற்ற வீரரானவர் தான் சச்சின் டெண்டுல்கர்.
 
உலகம் முழுக்க பலகோடி ரசிகர்களை வைத்துள்ளார். ஆனால் எளிமையின் வடிவமாகவே காட்சி  தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
 
களத்தில் இவரது பேட்டிங் ஸ்டைலுக்காகவே எண்ணற்ற இளைஞர்கள் தம் கதாநாயகனாக, குருவாக சச்சினை மானசீகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பலருக்கும் முன் மாதிரியாக உள்ளார்.
 
கடந்த 1973 ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்தார் சச்சின். கிரிக்கெட்டில் இந்திய அணி ஜெயிப்பதற்கு பலமுறை தனது பேட்டிங் திறமையால் கைகொடுத்துள்ளார். தற்சமயம் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சதனைக்கும் சொந்தக்காரர் இவர்தான்.
கிரிகெட்டில் பிராட்மேனுக்கு அடுத்த நிலையில் புகழப்படத்தக்கவராகவும், மதிக்கப்படுபவராகவும் சச்சின் உள்ளார்.
 
மேலும் இந்தியாவில் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை மிகக்குறைந்த வயதில் பெற்றவரும் இவர்தான். 
இத்தனை சாதனைகளுக்குச் சொந்தமான சச்சினுக்கு நாமும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments