Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணியின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் திணறல்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (20:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 56வது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 52 ரன்களுக்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் நிலை உள்ளது. ஆனால் அந்த அணி சென்னையின் அபார பந்துவீச்சால் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகின்றது. தொடக்க ஆட்டக்காரரான அதிரடி பேட்ஸ்மேன் கெய்லே ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனார். அதேபோல் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையிலும், பின்ச் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 
 
சென்னை அணியின் நிகிடி அபாரமாக பந்துவீசி 3 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதேபோல் சாஹர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் சென்னை அணி வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடைத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments