Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் மகனுடன் லுங்கி டான்ஸ் ஆடிய பி.வி.சிந்து; வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (14:17 IST)
சென்னையில் நடைபெற்ற பிரிமீயர் பேட்மின்டன் லீக்கில் பங்கேற்கும் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் அணியின் உரிமையாளர் விஜய பிரபாகருடன் பி.வி.சிந்து ஆடிய லுங்கி டான்ஸ் வீடியோ வைரலாகி உள்ளது.

 
3வது பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடர் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் சென்னை ஸ்மேஷர்ஸ் அணி பங்கேற்கிறது. 
 
இந்நிலையில் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது. இதில் பி.வி.சிந்து, கிறிஸ் அட்காக் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் போது மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோரிக்கையின் படி விஜய பிரபாகர் மற்றும் பி.வி.சிந்து லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடினர்.
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு சென்னை ஸ்மேஷர்ஸ் அணி பேட்மின்டன் லீக்கில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
 

நன்றி: Chennai Smashers

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments