Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் இவர்தான் – இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்குக் கிடைத்த கௌரவம் !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (16:41 IST)
ஐசிசி அறிவித்துள்ள இந்த ஆண்டின் சிறந்த வீரர் கேரி சோபர்ஸ் விருதை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.

ஐசிசி ஆண்டுதோறும் கேரி சோபர்ஸ் பெயரில் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார.  இந்த விருதை அவர் பெறுவதற்கு முக்கிய காரணமாக உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து எதிராக அவர் அடித்த 84 ரன்கள் எடுத்த போட்டியும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 134 ரன்களும் முக்கிய காரணமாக அமைந்தன.

அதேப்போல சிறந்த டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்தியாவின் ரோகித் சர்மாவும், இந்தியாவைச் சேர்ந்த தீபக் சாஹர் சிறந்த டி20 வீரர் என்ற விருதையும் பெற்றுள்ளார். இதேபோல சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷான் சிறந்த வளர்ந்து வரும் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments