Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்ரா, அஸ்வின் அபாரம் – 195 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (11:34 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து இன்று பாக்சிங் டே போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

களமிறங்கிய ஆஸி அணியின் பேட்டிங்கை ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களான பூம்ரா மற்று  அஸ்வின் ஆகிய இருவரும் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் தேனீர் இடைவேளை வரை ஆஸி 135 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் தனது அறிமுகப்போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. சிறப்பாக வீசிய பூம்ரா மற்றும் அஸ்வின் மேலும் விக்கெட்களைக் குவிக்க ஆஸி, 195 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இந்திய தரப்பில் பூம்ரா 4 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸி தரப்பில் மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments