Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் இன ரீதியான தாக்குதலுக்கு ஆளானது உண்மைதான்! ஆஸி கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (17:31 IST)
சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் சிராஜ் மற்றும் ஜாஸ்ப்ரீதி பூம்ரா ஆகியோர் இன ரீதியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிட்னியில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிறவெறி தாக்குதல் பேச்சுகள் எழுந்துள்ளன. மைதானத்தில் பீல்ட் செய்து கொண்டிருந்த சிராஜை சில பார்வையாளர்கள் நிற ரீதியாக தாக்கி பேசியுள்ளனர். இதுகுறித்து போட்டி முடிந்ததும் நடுவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதுபோல சிலர் சிராஜ் மற்றும் பூம்ரா ஆகியோரை நிற ரீதியாக தாக்கிப் பேசியுள்ளனர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு நடுவரிடம் புகாரளித்தனர். இதையடுத்து அவ்வாறு பேசிய 6 பேர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரே இந்திய வீரர்கள் பந்துவீசினர்.இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அவ்வாறு பேசிய ஆறு பேரும் நிரந்தரமாக கிரிக்கெட் அரங்குக்குள் நுழைய முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் அளித்த புகாரை வைத்து ஆஸி கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில் இந்திய வீரர்கள் இன ரீதியாக இழிவு செய்யப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை தேடி வருவதாகவும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நீண்டகால தடை விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments