Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நங்கூரம் பாய்ச்சி நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்- முதல் நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிருப்தி!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (15:56 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இன்று காலை சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் மழையால் சிறிதுநேரம் பாதிக்கபப்ட்ட ஆட்டம் பின்னர் தொடங்கியது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் நாள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளனர். தற்போது களத்தில் லபுஷான் 67 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களும் சேர்த்து உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments