Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டி உண்டு, ஆனால் ஆடியன்ஸுக்கு அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (09:00 IST)
போட்டி உண்டு, ஆனால் ஆடியன்ஸுக்கு அனுமதி இல்லை
கொரோனா வைரஸ் மனித இனத்தையே அச்சுறுத்தும் வகையில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பொது மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது 
 
அந்தவகையில் திரையரங்குகள், விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல், ஒலிம்பிக் உள்பட பல போட்டிகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அப்படியே போட்டிகள் நடந்தாலும் பார்வையாளர்கள் இல்லாமல் தொலைக்காட்சிகள் மற்றும் செயலிகளில் ஒளிபரப்பும் வகையில் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்திய பேட்மின்டன் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 24 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போட்டியை தொலைக்காட்சி மற்றும் செயலிகளில் மட்டுமே கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது
 
இந்திய பேட்மிட்டன் சங்கத்தின் இந்த அறிவிப்பால் பேட்மிட்டன் ரசிகர்கள் சோகமாக மாறியுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸால் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை  நடவடிக்கைக்கு ரசிகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இந்திய பெட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் இன்னிங்ஸைப் பார்த்தது போல இருந்தது.. கோன்ஸ்டாஸைப் பாராட்டிய ஆஸி முன்னாள் வீரர்!

நான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால்?- கோலி பதில்!

பும்ரா பந்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்ஸர்… அடித்து நொறுக்கிய இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments