Webdunia - Bharat's app for daily news and videos

Install App

250 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (13:49 IST)
இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடரில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அஸ்வின்.

இந்தியா –வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் திணறி வருகிறது.

இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் ஆளுக்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் வங்கதேசம் 50 ஓவர்கள் தாண்டுவதற்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

தற்போது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரில் 250வது விக்கெட்டை வீழ்த்திய சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதற்கு முன்னால் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அஸ்வின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments