Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்குத் தாவுகிறாரா அஸ்வின் ? – பஞ்சாப் அணியில் இருந்து விலகல் !

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (10:23 IST)
கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்து செயல்பட உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர். பின்னர் சென்னை அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது புனே அணிக்கு விளையாடினார். அதன் பின்னர் பஞ்சாப் அணிக்கு சென்ற அவர் கடந்த ஆண்டு அந்த அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணிக்காக விளையாட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லி அணியின் நிர்வாகி ஒருவர் ’அணியின் இயக்குனரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.  இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி எலிமினேட்டர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அஸ்வின் அந்த அணியில் சேர்ந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments