இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் யார்? பி.சி.சி.ஐயின் புதிய முடிவு

Mahendran
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (16:18 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ட்ரீம் 11  நிறுவனம் செயல்பட்டு வந்தது. சமீபத்தில், பி.சி.சி.ஐ  அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதன் காரணமாக, நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஜெர்சிக்கு ஸ்பான்சர் இல்லாமல் விளையாடி வருகிறது.
 
இந்த நிலையில், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐ விரைவில் வெளியிடும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த புதிய ஸ்பான்சர்ஷிப், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments