Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்துவீச்சில் சந்தேகம் – அம்பாத்தி ராயுடுவுக்கு சோதனை !

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (08:37 IST)
சர்ச்சைக்குரிய விதத்தில் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அம்பாத்தி ராயுடுவை சோதனைக்கு உட்படுத்தக் கூறியுள்ளது ஐசிசி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்தியாவின் பகுதி நேரப் பந்து வீச்சாளரான அம்பாத்தி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசினார். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணிக்கட்டை சுழற்றுதல் மற்றும் பந்தை எறிதல் ஆகிய ஆகிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டினால் அவர் தன்னை 14 நாட்களுக்குள் தன்னை சோதனைக்குட்படுத்தி தனது பந்துவீசும் முறையில் எந்த விதிமீறலும் இல்லை என நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் அதுவரையில் போட்டிகளில் விளையாடவும் ஒஅந்து வீசவும் தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவரது  பந்துவீச்சில் வீதிமீறல் இருப்பின் அவருக்கு பந்துவீசத் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்காப்படுகிறது.

ஏற்கனவே இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் சயித் அஜ்மல் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments