Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இங்கிலாந்து- இந்தியா மோதல்: இனிமேல்தான பாக்க போற இந்த காளியோட ஆட்டத்தை!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (11:10 IST)
நேற்று நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரையிறுதியில் மீண்டும் இந்தியா, இங்கிலாந்துடன் மோத வேண்டிய சூழல் வரலாம் என கணிக்கப்படுகிறது.

தற்போது புள்ளி விவர அட்டவணையின்படி முதலிடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா, இரண்டாவது இந்தியா, மூன்றாவது நியூஸிலாந்து, நான்காவதாகதான் இங்கிலாந்து இருக்கிறது. முதலில் நான்காவது இடத்தில் இருந்த பாகிஸ்தானை நேற்றைய வெற்றி மூலம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது இல்ங்கிலாந்து.

இந்தியா இன்னும் இரண்டு ஆட்டங்கள் விளையாட வேண்டியிருக்கிறது. இந்தியா தவிர மேலே சொன்ன அனைத்து அணிகளுக்கும் ஒரு ஆட்டம் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. அந்த ஒரு ஆட்டத்தில் ஏற்படும் வெற்றி தோல்வியை பொறுத்து அட்டவணையில் ஏற்ற இறக்கங்கள் வரலாம்.

இந்தியா அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அட்டவணையில் முதலிடத்துக்கு வந்து விடும். ஆஸ்திரேலியா அடுத்த ஆட்டத்தில் தோற்றால் இப்போதுள்ள 14 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கும். மேற்கொண்டு இங்கிலாந்து – நியூஸிலாந்து ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் இங்கிலாந்துக்கு மூன்றாவது இடம். அதுபோக நியூஸிலாந்து, பாகிஸ்தான் அடுத்த இடங்களை பிடிக்கும்.

இந்த யூகத்தின்படி ஆட்டம் அமைந்தால் அரையிறுதியில் இங்கிலாந்து-இந்தியா இடையே மீண்டும் மோதல் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் இந்தியா-நியூஸிலாந்து இந்த உலக கோப்பையில் மோதி கொள்ளவில்லை. மழைக்காரணமாக அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதனால் அரையிறுதி நியூஸிலாந்து- இந்தியா என்று கூட இருக்கலாம்.

இங்கிலாந்தோ, நியூஸிலாந்தோ யாராக இருந்தாலும் இந்தியா அவர்களை வெற்றிபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இப்போ தோற்றுபோனதுக்கு சேர்த்து அரையிறுதியில் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments