Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி – மீண்டும் கம்பீர் vs அப்ரிடி !

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (16:03 IST)
உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் விளையாடுவது குறித்து கம்பீர் சொன்ன கருத்துக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் அப்ரிடிக்கு இடையில் பல ஆண்டுகாலமாக வார்த்தை மோதல்கள் நடந்து வருகின்றன. அவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அப்ரிடியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்த போது அது மீண்டும் தொடர்ந்தது.

இதையடுத்து டெல்லி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கவுதம் கம்பீர் ‘இந்தியா பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பிசிசிஐ உறுதியான முடிவு எடுக்க வேண்டும். உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அதை தவிர்க்கவேண்டும்’ எனக் கூறினார். இது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்களிடம் பேசிய அப்ரிடி ‘ கம்பீர் பேசும் போது மூளையோடுதான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. படித்தவர்கள் அல்லது புத்தி உள்ளவர்கள் இதுபோல பேசுவார்களா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments