Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத ஆப்கானிஸ்தான்: கேப்டன் அதிரடி மாற்றம்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (22:01 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணி என்று ஒன்று இருக்கின்றது என்றால் அது ஆப்கானிஸ்தான் அணி என்பது அனைவரும் தெரிந்ததே. ஒன்பது லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றே கருதப்பட்டது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒருநாள் போட்டிகளுக்கு நெய்ப், டெஸ்ட் அணிக்கு ரஹ்மத் ஷா மற்றும் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாக இருந்து வந்த நிலையில் இனிமேல் மூன்று வகை போட்டிகளுக்கும் ரஷித்கான் கேப்டனாக செயல்படுவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
புதிய கேப்டன் ரஷித்கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்கட்டமாக வரும் செப்டம்பரில் வங்கதேச அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் முடிவடைந்ததும்  நவம்பர் 5 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. கேப்டனை மாற்றிய பின்னராவது ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL Mega Auction: சுக்கிரன் உச்சத்தில்..! அதிக விலைக்கு ஏலம் போன ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்! இதுவரையிலான ஏல பட்டியல்!

The Greatest of all time.. சச்சின் சாதனையை முறியடித்த கோலி! ஒரு வருடம் கழித்து அடித்த பவர்ஃபுல் சதம்!

ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி சதம்.. இமாலய இலக்கு.. திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்..!

IPL Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக துட்டு உள்ள அணி இதுதான்.. RTM கை கொடுக்குமா?

இரட்டை சதத்தை நோக்கி ஜெய்ஸ்வால்.. 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் அசத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments