Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி வீடியோ; கண்கலங்கிய ஆப்கான் வீரர்கள்...

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (16:19 IST)
ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அணியின் கேப்டன் கோலி வெளியிட்டுள்ள வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
ஆசிய கிரிக்கெட் அணிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அணி ஆப்கானிஸ்தான். இந்த அணி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கோலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
கோலி கூறியதாவது, உங்கள் நாட்டில் நடக்க இருக்கும் ஸ்பகிஸா டி20 போட்டிக்கு வாழ்த்துகள். நீங்கள் எந்த ஒன்றை செய்தாலும் உங்கள் முழு மனதோடு செய்யுங்கள். நீங்கள் விளையாடும் விளையாட்டுக்கு நேர்மையாக இருங்கள். கண்டிப்பா விரைவில் நீங்கள் உலகின் பெரிய அணியாக மாறுவீர்கள். உங்களுக்கான இடத்தை நீங்கள் விரைவில் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார். 
 
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போன்று ஆப்கானிஸ்தானில் ஸ்பகிஸா டி-20 என்ற தொடர் நடைபெற இருந்தது. ஆனால், வெடிகுண்டு தாக்குதலால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதற்காக தான் கோலி வீடியோவை வெளியிட்டுள்ளார். கோலியின் இந்த வீடியோவை பார்த்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி வீரர்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கோலிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments