Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி - கசிந்ததா 2.0 படப்போஸ்டர்...?

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி - கசிந்ததா 2.0 படப்போஸ்டர்...?

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (10:34 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் கசிந்துள்ளதாக ஒரு தகவல் உலவி வருகிறது. லைக்கா பிரமாண்டமாக தயாரித்துவரும் 2.0 படம், எந்திரனின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது.


 


அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்க்க அச்சு அசல் ஒரிஜினல் போஸ்டர் போலவே இருப்பதால், போஸ்டரை யாரோ ரகசியமாக வெளியிட்டதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
 
ஆனால், போஸ்டரில் உள்ள பல தவறுகள் இது ஒரிஜினல் போஸ்டர் அல்ல, ஏதோ ஒரு ரசிகர் உருவாக்கியது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது.
 
போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆர்ட் ரைடக்டர், டயலாக் ரைட்டர் ஆகியோரின் பெயர்களுக்குப் பிறகு இரண்டாவது வரிசையில் வருகிறது. இது பெரும் அபத்தம். முதல்வரிசையில் ஒளிப்பதிவாளரின் பெயருக்கு முன்பே ரஹ்மானின் பெயர் இடம்பெறுவதுதான் வழக்கம். இது ஒன்றே இந்த போஸ்டர் ஒரிஜினல் போஸ்டர் அல்ல என்பதற்கு போதுமான உதாரணம். மேலும், எழுத்துப்பிழைகளும் இந்த போஸ்டரில் உள்ளது. 
 
எதுவாக இருப்பினும், ஒரிஜினல் போஸ்டர் போலவே வடிவமைத்த அந்த ரசிகரை பாராட்டியே ஆக வேண்டும்.
 
வருகிற 7 -ஆம் தேதி ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தேவி வெளியாகிறது. அவர் இயக்கிய படங்களில் மதராசப்பட்டணம் படம் மட்டுமே ஹிட். மற்ற படங்கள் அனைத்தும் வியாபாரரீதியாக தோல்வியடைந்தவை. அஜித்துக்கு கிரீடம், விக்ரமுக்கு தாண்டவம், விஜய்க்கு தலைவா, விக்ரம் பிரபுக்கு இது என்ன மாயம் என ஆளுக்கொரு அட்டர் ப்ளாப்பை பரிசாக தந்தவர். உலகம் இன்னும் இவரை நம்பிக் கொண்டிருப்பது வினோதம்.

 
விஜய்யின் இன்னொரு ரகசியம், அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் ஏதாவது படத்தின் அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற தழுவல். தேவி படம் எந்தப் படத்தின் தழுவல் என்று கண்டுபிடிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
 
கொசுறு தகவல், தேவி விஜய்யின் இரண்டாவது ஹிட்டாக இருக்க வாய்ப்புள்ளது என எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
 
ரயிலை வைத்து படம் எடுத்த இயக்குனர் தமிழில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான ஒரு படத்தின் அப்பட்டமான தழுவல். இயக்குனர் தெரிந்தே இப்படி கதை திருடினால் ஜீசஸ் தண்டிக்க மாட்டாரா என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments