1940 வெளியான இந்த திரைப்படம்தான், தமிழில் வெளிவந்த முதல் இரட்டை வேடத் திரைப்படம் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு முன்பே 1935 இல் துருவன் என்கிற படத்தில் இரட்டை வேடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நிறைய ஆதாரங்களோடு தியடோர் பாஸ்கரன் "மீதி வெள்ளித் திரையில்" புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்துள்ளார். பி.யு சின்னப்பாவிர்காக இந்த படத்தை அவசியம் ஒருமுறைப் பார்த்துதான் ஆகவேண்டும்.
34. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஏ.பீம்சிங்
ஜெயகாந்தனின் நாவலை படமாக்கி இருப்பார்கள். ஆனால் ஒரு நாவலை மோசமாக படமாக்கிவிட்டார் பீம்சிங் என்கிற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
18 சூப்பர்ஹிட் பாடல்களுடன் மூன்று தீபாவளிகளுக்கு தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியத் திரைப்படம் என்கிற சாதனை படைத்த திரைப்படம்.
36.
மலைக்கள்ளன் - ஸ்ரீ ராமுலு நாயுடு குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
37.
மீரா - எல்லிஸ். ஆர். டங்கன்
எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்து வெளியானத் திரைப்படம். காற்றினிலே, கோபாலனே போன்ற இனிய பாடல்கள் நிறைந்தத் திரைப்படம்.
மகேந்திரனின் மற்றுமொரு முக்கியமானத் திரைப்படம். சுஹாசினி சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.
42.
பொண்ணு ஊருக்குப் புதுசு - ஆர். செல்வராஜ். இந்த படத்தில் சரிதாவின் நடிப்பு மிக முக்கியமானது. பெரியாரின் கொள்கைகளை தொடரும் பெண்ணாக நடித்திருப்பார் சரிதா.
43.
சின்னத்தாயி - எஸ். கனேசராஜ். நாட்டார் கலை மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்ட திரைப்படம்.
மற்றமொழித் திரைப்படங்கள்:
-----------------------------------------------
44. Nirbachana - ஒரிய மொழித் திரைப்படம் - Biplab Ray Chaudhuri.
45. Percy ( குஜராத்தி மொழித் திரைப்படம் ) - Pervez Merwanji
46. Shesha Drushti - ஒரிய மொழித் திரைப்படம்
47. Stri - தெலுகு - K. S. Sethu Madhavan
48. Tiladaanam - தெலுகு - K.N.T. Sastry
49. Uski Rotti - ஹிந்தி மொழித் திரைப்படம் - மணி கவுல்
50. Nagarik - வங்கமொழித் திரைப்படம் - ரித்விக் கட்டக்