உங்கள் கஷ்டங்கள் தீர இதை செய்து பாருங்கள்...!

Webdunia
தினமும் காலை குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டுவிட்டு காகத்திற்கு ஒரு கைப்பிடி உலர் திராட்சையை அளிக்க வேண்டும். இப்படி  செய்து வருவதன் மூலம் உங்களின் அத்தனை கஷ்டங்களுக்கும் தீர்வாக அமையும் .
இதை செய்யமுடியாதவர்கள் காலையில் புதிதாக வெள்ளை சோறு வடித்து நாம் சாப்பிடுவதற்கு முன் அதில் எள் சிறிதளவு கலந்து காகத்திற்கு அளித்து காகம்  சாப்பிட்டதற்கு பின் நாம் சாப்பிட்டு வரலாம். இதனால் நாம் அனுபவித்துவரும் துன்பங்கள் பனிபோல விலகும். காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் சனிபகவானின் அருள் மட்டுமல்லாது நம் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைத்து வாழ்வில் முன்னேற உதவும்.
 
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள். காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சிதருமாம்.
 
கால்கள் ஊனமுற்ற மாற்று திறநாளிகளுக்கு இயன்ற உதவியைச் செய்வதன் மூலம் சனிபகவானின் மனதை குளிர்விக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments