Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கிழமையில் எந்த கோயிலுக்கு செல்வது பலன் தரும்...?

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (15:56 IST)
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வழிபாடு செய்துவந்தால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படக் கூடிய கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
திங்கட்கிழமை: திங்கட்கிழமைகளில் சந்திரனின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் திருப்பதி அல்லது திங்களூர் சென்று வழிபாடு செய்துவந்தால் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படக் கூடிய கிரக தோஷங்கள் நீங்கும்.
 
செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாயின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் வைத்தீஸ்வரன்கோயில் சென்று வழிபாடு செய்துவந்தால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படக் கூடிய தீமைகள் நீங்கும்.
 
புதன்கிழமை: புதன்கிழமைகளில் புதன் கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த கிழமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று  வழிபாடு செய்து வந்தால் ஜாதகத்தில் புதன் கிரகத்தால் ஏற்படக் கூடிய தீய பலன்கள் நீங்கும்.
 
வியாழக்கிழமை: வியாழக்கிழமைகளில் வியாழன் கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த கிழமையில் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபாடு செய்து வந்தால் ஜாதகத்தில் குருவினால் ஏற்படக் கூடிய கிரக தோஷங்கள் நீங்கும்.
 
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை வழிபாடு செய்துவர ஜாதகத்தில் சுக்கிரனால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
 
சனிக்கிழமை: சனிக்கிழமைகளில் சனி கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் திருநள்ளாறு கோயில் சென்று வழிபாடு செய்துவர ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்படக் கூடிய தடை,தாமதங்கள் விலகும். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments