Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டியம் என்பது என்ன? இந்த நாளில் சுபகாரியங்கள் செய்வது நல்லதா...?

Webdunia
பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வார்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். 

பெளர்ணமி முழு மதிநாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும்,  பெளர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி. 
 
பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக  அழைப்பார்கள்.
கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது.  அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள். போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள்.  போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.
 
இதை பெரியவர்களோ, கிராமங்களில் உள்ளவர்களோ பாட்டியம், பாட்டிமுகம், பாட்டுவம், பாட்டிமை இப்படி ஏதாவது ஒரு பெயர் சொல்லி அழைப்பார்கள். அமாவாசையிலோ, பௌணர்மியிலோ பூமியில் கதிர்வீச்சின் தன்மையும், ஈர்ப்பு விசையும் மாறுபட்டிருக்கும் ஆனால் முதல்  திதியான பிரதமை திதியில் கதிர்வீச்சு குன்றுவதால் எந்த சுபகாரியங்களும் செய்யகூடாது என்பது சாஸ்திர நம்பிக்கையாகும்.
 
ஆனால் இந்த தினத்தில் போர் பிரகடனம் செய்யவோ, கோமாதா என்றழைக் கூடிய பசு வாங்கோவோ உகந்த நாளாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments