Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரகங்களில் ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்ட முத்திரைகள்...!!

Webdunia
பஞ்ச பூதங்களும் நம் கை விரல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அனைத்து பஞ்ச பூதங்களும் சரிசமமாக நம் உடலில் இயங்கினால்தான் நாம் எந்த நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மனமும் நல்லபடியாக இயங்கும்.
இதேபோல் நம் கைவிரல்களுக்கும் கோள்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோள்களில் இருந்து வரும் எனர்ஜியை நம் கை விரல்கள்  மூலமாகவே ஈர்க்க முடியும்.
 
நமது பெருவிரல் அக்னி சக்தியை கட்டுப்படுத்தக்கூடியது. இது சூரியன் மற்றும் செவ்வாயில் இருந்து வரும் காந்த அலைகளை ஈர்க்கக்  கூடியது.
 
ஆள்காட்டி விரல், வாயு சக்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இது வியாழன் கோள்களில் இருந்து வரும் எனர்ஜியை ஈர்க்கும் தன்மை  கொண்டது.
நடுவிரல் ஆகாய சக்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சனி கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது.
 
நமது மோதிர விரல் மண் சக்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கிரன் கிரகத்தில் இருந்து வரும் ஆற்றலை ஈர்க்கும் தன்மை  கொண்டது.
 
சுண்டுவிரல் நீர்ச் சக்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. புதன் மற்றும் சந்திரனில் இருந்து வரும் காந்த ஆற்றலை ஈர்க்கக் கூடியது.
 
கை விரல்களை கொண்டு நாம் முத்திரை பிடிக்கும்போது சில இரசாயன மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும். அப்போது குறிப்பிட்ட  கிரகங்களில் இருந்து வரும் எனர்ஜியை நமக்கு பெற்று தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments