ரோஜா, சாமந்தி பூக்கள் சிலவற்றில் காம்பில்லாமல் இருக்கும். அதனை எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.
பெரிய அகல் விளக்குகள் வாங்கி வைத்து அவற்றில் மெழுகுவர்த்தி, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்றலாம், கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்கலாம்.
கற்பூர பாட்டிலில் நாலைந்து மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.
மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தியும் மயிலிறகிற்கு உண்டு.
பூஜையறை கதவுகளில் சிறுசிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும்போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.
ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நீண்டநேரம் எரிந்து மணம் பரப்பும்.