Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - கும்பம்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:36 IST)
கேட்பவர்களுக்கு கொடுத்து உதவுபவர்களே! 24-ஆம் தேதி வரை செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரங்கள் மனம் விட்டு பேசுவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். ராசிநாதன் சனிபகவான் சாதகமாக இருப்பதால் புது வேலை அமையும். வேற்றுமொழி, மாற்று மதத்தவர்களால் உதவிகள் உண்டு.
 
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அடகிலிருந்த நகையை மீட்க வழி கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், பணப்பற்றாக்குறையும் வந்துப் போகும்.
 
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது பெருமூச்சுவிடுவீர்கள். சளித் தொந்தரவும், தோலில் நமைச்சலும் வந்து நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சூரியன் சாதகமாக இல்லாததால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு. விட்டுக் கொடுத்து இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments