Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவகிரக தோஷத்தை போக்கும் நவதானியத்தின் பலன்கள்...?

Webdunia
சூரியன்: சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய  பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். 
சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம்  நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது.
 
செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை  தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.
 
புதன்: புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும்.  வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.
 
குரு: குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும்.  மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
 
சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம்.
 
சனி: சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும்.  கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.
 
இராகு: இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு. 
 
கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்