Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் மாத ராசிப் பலன்கள் - கன்னி

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:10 IST)
தீவிர சிந்தனை அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் யோகாதிபதியான சுக்ரன் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள்.

கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 13-ந் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும்.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி கிட்டும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். 5-ந் தேதி வரை உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமாக இல்லாததால் அடுத்தடுத்து வேலைகள் இருந்துக் கொண்டேயிருக்கும். தொண்டைப் புகைச்சல், மூச்சுப் பிடிப்பு வந்துச் செல்லும்.

செவ்வாய் 8-ல் அமர்ந்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யதார்த்தமாக பேசுவதை சிலர் தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே இரும்புச் சத்துள்ள காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்து விவகாரங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

9-ந் தேதி வரை குரு 2-ல் நிற்பதால் திடீர் பணவரவு, எதிலும் வெற்றியெல்லாம் கிட்டும். 10-ந் தேதி முதல் குரு வக்ரமாகி ராசிக்குள் நுழைவதால் முடி உதிர்தல், காய்ச்சல், வயிற்று உப்புசம், கை, கால் அசதி, சோர்வு வந்து விலகும். தாழ்வுமனப்பான்மையும் தலைத்தூக்கும். நீங்கள் எதை செய்தாலும் தோல்வியில் முடிவதையும், எதை சொன்னாலும் தவறாக சிலர் புரிந்துக் கொள்வதையும் நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பீர்கள். அயல்நாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்யோகத்தில் வேலையாட்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

புது வாய்ப்புகளும் கூடி வரும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளை அலுவலகத்தில் பரப்புவார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பாராட்டிப் பேசப்படும். ஆடம்பச் செலவுகளைக் கட்டுப்படுத்தி குடும்பத்தில் உள்ளவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய மாதமிது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments