Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்தவர்கள் படத்திற்கு எந்த திசையை பார்த்து விளக்கு ஏற்றவேண்டும் தெரியுமா...?

இறந்தவர்கள் படத்திற்கு எந்த திசையை பார்த்து விளக்கு ஏற்றவேண்டும் தெரியுமா...?
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். 

வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது.
 
காலையில் 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன் நம் வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும்.
 
அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு விளக்கேற்ற வேண்டும். அதாவது 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி இருக்க வேண்டும்.
 
இறந்தவர்களின் படத்திற்கு விளக்கினை ஏற்றும் போது மட்டும் தான் வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் விளக்கின் திசையை மாற்றக் கூடாது. 
 
நாம் கோவில்களில் விளக்கினை ஏற்றினாலும், நம் வீட்டில் விளக்கினை ஏற்றினாலும், இரண்டு கால்களையும் மடக்கி சம்மணம் இட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றும்போது தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்ராட்சத்தை அணிந்துக்கொள்வதால் என்ன பலன்கள் தெரியுமா...?