Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் சிதம்பரம் !!

Webdunia
பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே ! உன்னிடம் ஏதும்  இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். 

புராணங்கள் சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி  அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள். இந்த சிதம்பர ரகசியத்தை  வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன்  கிடைக்கும். ஆனால் எவ்வித  பலனையும் சிந்திக்காமல்  ‘நிஷ்சங்கல்’பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.
 
இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது  மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை  என்பது மாயை. திரை விலகினால் ஒளி  தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு  மூலஸ்தானம். அருவ  வடிவமாக,  இறைவன்  இங்கு ஆகாய உருவில்  இருக்கிறான்  என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும்.  அதனால் சிதம்பரம் ஆகாயத் தலமாக  என்றும் பூஜிக்கப்படுகிறது.
 
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை  திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.
 
இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே  இதன் ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால்  செய்யப்பட்ட  'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும்  காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது. 
 
மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின்  அடிப்படையில் தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments