Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எருக்கன் செடி 12 வருட காலம் மழை இல்லாவிட்டாலும், அதன் பருவ காலங்களில் பூத்து, காய்த்து, வளர்ந்து வரும்.

இது சூரியனுடைய மூலிகை சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது. இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு. இந்த  வெள்ளெருக்கு செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி.
 
இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க பயன்படுகிறது.  வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். 
 
வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் பணவரவை  கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. 

சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை  தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தனம் ஆகர்ஷணம்  ஆகும்.
 
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments