5 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.
5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்களுக்கு அதீத பசி உணர்வு கட்டுக்குள் வந்து, அளவாக உட்கொள்ளும் உணர்வை உண்டாக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சிவனின் சக்தி நிறைந்த 5 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் விபத்து, அகால மரணம் போன்றவைகள் ஏற்படாமல் நம்மை காக்கும் ஒரு சிறந்த தெய்வீக காப்பாக இருக்கிறது.
நவ கிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுப கிரகமாக இருக்கிறார். சுப கிரகமாக இருந்தாலும் ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஒரு சில பாதகமான கட்டங்களில் இருந்தால், அந்த ஜாதகர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
குரு பகவானின் நல்லருளை பெறவும், அவரின் கிரகாச்சார காலத்தில் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் இருக்கவும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது.
ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களும், துறவறம் மேற்கொள்ள விரும்புபவர்களும் 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது. உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் இறைவன் பால் திருப்பும் சக்தி கொண்டது ஐந்து அல்லது பஞ்ச முக ருத்ராட்சம்.
இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம் காக்கப்படுகிறது.