Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனி மாத ராசிபலன்கள் 2023! – மீனம்!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (21:44 IST)
கிரகநிலை:


தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சந்திரன்   - சுகஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

18-06-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

04-07-2023 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற  மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும். போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களகங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

ரேவதி:
இந்த மாதம் புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 21, 22

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்