Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலில் 4 லட்சம் குழந்தைகள்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (12:57 IST)
ஒரு ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று சைல்டு லைன் இயக்குநர் மரிய கமலம் தெரிவித்தார்.

திருச்சி சைல்டு லைன் சாக்சீடு அமைப்பின் ஏழாம் ஆண்டு விழாவில் இயக்குநர் மரிய கமலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியாவில் ஆண்டிற்கு 44,000 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அதில் 22 விழுக்காடு மட்டுமே மீட்கப்படுகிறார்கள்.

ஒரு ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதிலும் 1 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளப்படுகிறார்கள். இவர்களை மீட்பதில் காவல் துறைதான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மரிய கமலம் கூறினார்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது