Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை அழாமல் இருந்தாலும் பிரச்சினைதான்

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (13:33 IST)
பிறந்த குழந்தைக்கு உடல்நிலையில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும்போது அவைகள் அழுவதில்லை, மாறாக ஒரு சில அசைவுகளை செய்கின்றன என்கிறது ஒரு ஆய்வு.

ஒரு சில பிறந்த குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களையும், வலியையும் ஒரு சில அசைவுகளின் மூலமே வெளிப்படுத்துகின்றனவே தவிர அழுவதில்லை என்கிறது ஆந்த ஆய்வு.

எனவே அழுதால் மட்டுமே குழந்தைக்கு ஏதேனும் பிரச்சினை என்றில்லாமல், வித்தியாசமாக அவர்களது உடலை வளைத்தாலோ, அசைத்தாலோ அங்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை பெற்றவர்கள் உணர வேண்டும்.

இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட 12 குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள் உடலில் வலி ஏற்படும்போது அழாமல் உடல் அசைவுகளைத் தான் வெளிப்படுத்துகிறது.

இதனை அவர்களது மூளை திறனில் ஏற்படும் மாற்றத்தை வைத்துத்தான் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் அக்குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பதை கண்டறிவது மருத்துவர்களுக்கு சிரமமான விஷயமாகிவிடுகிறது என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள்.

ரிபெக்கா ஸ்லாட்டர் என்ற பெண் மருத்துவரின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குழந்தைகளுக்கு எங்கு வலி ஏற்படுகிறது என்பதை கண்டறியும் கருவிகளும், இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் வலிகளைக் கண்டுபிடிக்க தவறுகிறது என்கிறார் அவர்.

மருத்துவமனைகளில் இருக்கும் குறைமாதக் குழந்தைகளும், பிறந்து ஒரு சில நாட்களே ஆன குழந்தைகளும் அழுவது என்பது வலி ஏற்படுவதன் வெளிப்பாடாக இருப்பதில்லை.

இதுவரை குழந்தை அழுதால் அதற்கு உடலில் ஏதேனும் வலி இருக்கும் என்ற அடிப்படையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆய்வின் மூலம், அக்குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் உடல் அசதி, பசி, ஜலதோஷம் போன்ற அசெளகரியங்களும் காரணமாக இருக்கும் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அழாமல் இருக்கும் குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இருப்பதில்லை என்பதும் தவறானது. எப்போதும் ஒரே மாதிரியான அசைவுகளையும், கை, காலையோ தூக்கியபடியே அல்லது அசைக்க மறுக்கும் போது அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சினை இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டியதாகிறது.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments