Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வித்யுத் ஜம்வால் ஜோடியாக ஹிந்திப் படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

வித்யுத் ஜம்வால் ஜோடியாக ஹிந்திப் படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்
, சனி, 21 ஏப்ரல் 2018 (16:03 IST)
வித்யுத் ஜம்வால் ஜோடியாக ஹிந்திப் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

 
சுந்தர்.சி இயக்க இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகிவிட்டார்; கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படமும் அப்படியே நிற்கிறது; எனவே, ஸ்ருதியின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான். வெளிநாட்டுக் காதலரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகப் போகிறார் என்று ஸ்ருதி ஹாசனின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாகப் பலரும் பேசியும் எழுதியும் வந்தனர்.
 
ஆனால், ஹிந்திப் படம் ஒன்றில் கமிட்டாகி எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்ருதி ஹாசன். மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில், வித்யுத் ஜம்வால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஸ்ருதி தான் ஹீரோயின். நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தை, கலானி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த ஊரில் சிபிராஜ் பட ஷூட்டிங்