Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இளைய தளபதி சூப்பர்குட் ஃபிலிம்ஸ்

மீண்டும் இளைய தளபதி சூப்பர்குட் ஃபிலிம்ஸ்
, செவ்வாய், 23 அக்டோபர் 2012 (19:15 IST)
FILE
சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஜய் நடித்த அனைத்துப் படங்களும் ஹிட். இந்த ராசியை மறுபடியும் ப‌ரிசோதிக்க தீர்மானித்திருக்கிறார்கள் சௌத்‌ரியும், விஜய்யும்.

இந்தப் பேச்சு அமைதியடையாத ஆவியாக கொஞ்ச நாளாக கோடம்பாக்கத்தை சுற்றுகிறது. இப்போது அடுத்த ஸ்டெப். அதாகப்பட்டது இவர்கள் இணையும் படத்தை இயக்கப் போகிறவர் என்று ஒரு பெயரை உலவவிட்டிருக்கிறார்கள்.

இந்த அதிர்ஷ்டசாலி (அப்படி சொல்லிட முடியாது. சுறா, அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன் என்று விஜய்யை இயக்கியவர்கள் காணாமல் போனவர்கள் லிஸ்டில் போனவர்கள்தான், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை) ஜெயம் ராஜாவுடன் வேலாயுதம் படத்தில் வேலை பார்த்தவராம். பெயர் நேசன்.

இவ‌ரின் பயோடேட்டாவில் முருகா என்ற படத்தை இயக்கியவர் என்று போட்டிருக்கிறது. அப்படியொரு படத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Share this Story:

Follow Webdunia tamil