என் மகனே! மரணம் நேருவதைத் தடுக்க முடியாது. கற்களைப் போலவும், கட்டைகளைப் போலவும் செத்து மடிவதை விட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? அதிலும் மற்றவர்களுக்கு செயவதற்காக அழிந்து போவது மிகவும் நல்லது. துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது. நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம். எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க...