பௌர்ணமி பூஜை செய்வதால் இவ்வளவு நன்மைகள் உண்டா?

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (14:48 IST)
பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள்  விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில்  முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
 
பௌர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அதாவது,  பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
கோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை பெறலாம் என்ற காரணத்தை வைத்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும்  இருக்கிறது. மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து, அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு  பல மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும் ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.
 
அர்த்த பூர்ணிமம் என்பது பௌர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும். பூர்வ பூர்ணிமம் என்பது பௌர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும். உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும். பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான நேரம்  பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

'யோக தட்சிணாமூர்த்தி' எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு மிக்க கோவில்.. எங்கு உள்ளது?

அடுத்த கட்டுரையில்
Show comments