Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவா? அவுங்க திட்டங்கள் எல்லாம் டோட்டல் வேஸ்ட்: நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்கவிட்ட தம்பிதுரை

பாஜகவா? அவுங்க திட்டங்கள் எல்லாம் டோட்டல் வேஸ்ட்: நாடாளுமன்றத்தில் கிழித்து தொங்கவிட்ட தம்பிதுரை
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (13:10 IST)
பாஜக திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்த திட்டம் தான் என அதிமுக எம்.பியும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். 
 
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுமே மக்கள் பயன் பெறும் விதமாக இல்லை எனவும், முக்கியமாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு குறி வியாபாரிகள் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஸ்வச் பாரத் திட்டம் என பீத்திக்கொள்ளும் மத்திய அரசு, அது எந்த அளவுக்கு சுகாதாரமாக இருக்கிறது என கவனிப்பதில்லை அதுவும் ஃப்லாப்பான திட்டமே.
 
கஜா, தானே, ஓகி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் பல விஷ்யங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து 10,000 கோடி நிதி வர வேண்டியது இருக்கு தமிழகத்திற்கு. அந்த தொகை இன்னும் வரவில்லை. உங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் காசுக்காக உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது.
 
அதேபோல் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய அவர், இது பட்ஜெட் போல் தெரியவில்லை எனவும் இது தேர்தல் அறிக்கை போல் உள்ளது எனவும் தெரிவித்தார்.
 
மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என சொல்லும் மத்திய அரசு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது ஏன்? துணிகளை ஏன் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்கிறது? என கேள்வி எழுப்பினார்.
 
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தே தமிழகத்திற்கு நிதி கேட்டு பல முறை கடிதம் எழுதியுள்ளோம். இதுவரை எந்த ரெஸ்பான்சும் இல்லை. காங்கிரஸ், பாஜக என்ற இரு தேசியக் கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. இவர்கள் மாநிலக் கட்சிகளின் உரிமையை பறிக்க நினைத்து அவர்களை ஒன்னும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்த பார்க்கின்றனர் என கண்டமேனிக்கு பேசினார் தம்பிதுரை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரே மேடையில் மு.க. ஸ்டாலின், கமல்...சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்...