Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதியில் இலவச திருமணம் செய்ய அரிய வாய்ப்பு

திருப்பதியில் இலவச திருமணம் செய்ய அரிய வாய்ப்பு

திருப்பதியில் இலவச திருமணம் செய்ய அரிய வாய்ப்பு

கே.என்.வடிவேல்

, ஞாயிறு, 27 மார்ச் 2016 (23:48 IST)
திருப்பதி கோயிலில் இலவச திருமணம் நடத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில், தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் பேசியதாவது:-
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் நித்திய கல்யாணம் நடைபெறுகிறது. இதற்காக, தேவஸ்தானம் சார்பில் பாபவிநாசம் சாலையில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பலருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குறிப்பாக, முகூர்த்த நாட்களில் 250க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படும்.
 
இதற்காக, அர்ச்சகருக்கு ரூ.500, வாத்தியங்கள் வாசிக்க ரூ.300, வீடியோ படம் பிடிக்க மின்சார செலவுக்கு ரூ.60 என மொத்தமாக ரூ.860  வசூல் செய்யதனர். இனிமேல் பக்தர்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தப்படும் என்றார்.
 
மேலும், திருமணத்திற்கு பின்பு, சுபதம் வழியாக அனுப்பப்பட்டு வந்த புதுமண  தம்பதிகள், இனி ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம். அத்துடன், புதுமண தம்பதிகளுக்கு மஞ்சள், குங்குமம்,  கங்கண கயிறு மற்றும் 10 லட்டுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார். 
 
மேலும், தகவல் அறிய,  1800425111111 மற்றும் 1800425333333 எண்ற கட்டமில்லா தொலைபேசி எண்ணிலும், 0877 - 2264217 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு அலுவலரையும், மேலும், சென்னையில் இயங்கி வரும் அதன் கிளை அலுவலக தொலைபேசி எண்களான  044 - 24346219 மற்றும் 24343535 தொடர்பு கொண்டு அதிக விபரங்கள் பெறலாம்.   

Share this Story:

Follow Webdunia tamil