இந்த கோயிலுக்காக வடிவமைக்கப்பட்ட 51 அடி உயரமும், 22 அடி அகலமும் கொண்ட தேவி கருமாரி அம்மனின் சிலை நேற்று முன்தினம் இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவரை அங்கு 3 அடி உயரத்தில் இலுப்பைப்பூ மரத்தால் ஆன கருமாரி அம்மன் சிலையை வைத்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சிலையை நிறுவி கோவில் கட்டும் பணியை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் அறக்கட்டளை மேற்கொண்டு உள்ளது.
இந்த அறக்கட்டளையின் தலைவர் மதுரை முத்து சுவாமிகள் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அவருடைய முன்னோர்கள் தான் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலை கட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஆசிரியர் பயிற்சி முடித்து இருந்தபோது 27-வது வயதில் கருமாரி அம்மன் விசுவரூப தரிசனம் கிடைத்தது என்றும், அதன்படி இந்த சிலை வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பெண் தெய்வத்திற்கு 51 அடி உயர சிலை உலகிலேயே வேறு எங்கும் கிடையாது என்றும் அவர் கூறினார்.