Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இகாத்புரியில் உள்ள கத்தன் தேவி கோ‌யி‌ல்

-அபினய் குல்கர்னி

Webdunia
மும்பையில் இருந்து நாசிக் வரும் வழியில் இருக்கிறது இகாத்புரி கிராமம். கடற் மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் இந்த சிறிய கிராமம் உள்ளது.

இந்த இகாத்புரி கிராமத்தை இப்போதுவரை நாகரீகத்தின் சுவடு கூட எட்டிப்பார்க்கவில்லை.

காலையில் சூரியன் உதித்ததும், வானத்தில் நட்சத்திரங்கள் மறைந்து சூரியக் கிரணங்கள் நிரம்பிக் கொண்டிருக்கும்போது, புல்லில் இருக்கும் பனித்துளிகள் மறையும் வேளையில் பறவைகள் தங்கள் கூடுகளை விட்டு இறை தேடச் செல்லும் ரீங்கார இசையும் அந்தக் கிராமத்துக் காற்றில் மிதந்து வருகிறது.

மற்ற எந்த மலைப் பிரதேசத்தை விடவும் அதிகக் குளிரான இந்த கிராமத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ‌மி க அதிகம். இகாத்புரி இரண்டு காரணங்களினால் புகழ்பெற்றுள்ளது. ஒன்று, புகழ்பெற்ற யோகாசாரியா சத்யநாராயணன் கோன்காவினால் தோற்றுவிக்கப்பட்ட விபாஷ்யானா மையம், மற்றொன்று இந்த கத்தன்தேவி கோ‌யி‌ல்.

webdunia photoWD
இகாத்புரி கிராமத்திற்குள் நுழைந்ததும், ஒட்டகப் பள்ளத்தாக்கை தாண்டி, வலது புறத்தில் ஒரு சாலை செல்லும். அந்த சாலையில் சென்றால் கத்தன் தேவி கோயிலை (மலைகளின் கடவுளுக்கான கோயில்) அடையலாம். அந்தச் சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் பின்புறத்தில் டிரிங்கால்வாடி கோட்டை அ ம ¨ந்து உள்ளது.

இகாத்புரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த கத்தன்தேவி கோயிலின் உள்கட்டமைப்பு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. சுயம்புவாகத் தோன்றியது என்று கூறப்படும் இந்த கோயிலில் அமைந்துள்ள கத்தன் தேவியின் திருவுருவத்தை, மலைகளை காக்கும் தெய்வமாக அங்கிருப்போர் வழிபடுகின்றனர்.


webdunia photoWD
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இறை அருள் கிட்டுவது மட்டுமின்றி, கண்ணுக்கு பசுமையான, இயற்கையான காட்சிகளும் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த கோயிலைப் பற்றிய புராதனக் கதையில், கத்தன் தேவி ஷைல்புத்தி அவதாரம் எடுத்திருந்த போது ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றதாகவும், அப்போது இவ்விடத்திற்கு வந்த கத்தன் தேவிக்கு, இயற்கை அழகில் மயங்கி நிலையாக இங்கேயேத் தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மராட்டிய வீரர் சிவாஜியும், கல்யாண் நகரத்தைக் கைப்பற்றிவிட்டு தனது தலைநகருக்குச் செல்லும்போது இந்த கோயிலுக்கு வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறை சக்தியை தூண்டும் விதத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்குகள், நெடுந்துயர்ந்து நிற்கும் மலைகள் என இந்த கோயிலில் பார்ப்பதற்கு இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது.

எப்படி செல்வது?

webdunia photoWD
விமான மார்கம் - மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இகாத்புரிக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். அங்கிருந்து வாடகைக்கு கார் அமர்த்திக் கொண்டு செல்ல வேண்டும். வாடகைக் காருக்கு ரூ.2000 ஆகும்.

ரயில் மார்கம் - மும்பை விடி ரயில் நிலையத்தில் இருந்து தபோவன் விரைவு ரயில் இகாத்புரி ரயில் நிறுத்தத்திற்கு செல்கிறது. கசாரா ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து வாடகைக் காரிலும் செல்லலாம். அங்கிருந்து ரூ.300 மட்டுமே கார் வாடகை.

சாலை மார்கம் - இகாத்புரிக்கு எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் சாலைகள் உள்ளன. மும்பை, நாசிக், கசரா நகரங்களில் இருந்து பேருந்துகள் இகாத்புரிக்கு செல்கின்றன. மும்பை, கசராவில் இருந்து சுற்றுலாப் பேருந்துகளும் செல்கின்றன. அவற்றுக்கு ரூ.500 செலவாகும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை!

இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!

கல்யாண வரம் வேண்டுமா? கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்..!

இந்த ராசிக்காரர்கள் பணப்புழக்கம், பழக்க வழக்கங்களில் கவனம் தேவை! – இன்றைய ராசி பலன்கள்(08.01.2025)!

Show comments