நாசிக்கின் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றான காலாராம் மந்திர் பஞ்சாவதி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள கோயில்களிலேயே மிகப் பெரியதும், மிகவும் எளிமையானதுமான கோயில்தான் காலாராம் மந்திர்.இந்தக் கோயிலின் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ராமர் சிலை முழுவதும் கறுப்பு நிறக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்தக் கோயில் அனைவராலும் காலாராம் மந்திர் (கறுப்பு ராமரின் கோயில்) என்று அழைக்கப்படுகிறது. ராமரைப் போலவே சீதை, லட்சுமணன் ஆகியோரின் சிலைகளும் கறுப்பு நிறக் கல்லில்...