இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் காக்கும் கடவுளாகிய ஸ்ரீ ஷேத்ர மனுதேவி கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். மத்தியப் பிரதேசத்தையும் மராட்டியத்தையும் பிரிக்கும் சாத்பூரா மலைத் தொடரில் பசுமையான அடர்ந்த வனப்பகுதியில் அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் மனுதேவி கோயில் அமைந்துள்ளது.பழமை வாய்ந்த மனுதேவி கோயில் மராட்டியத்தில் யாவல்- சோப்ரா நெடுஞ்சாலையின் வடக்கு முனையில் காசர்கெட்- அட்கான் கிராமங்களில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி...