தமிழ்நாட்டின் எல்லைக்கருகே, ஆந்திர மாநித்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தென் கயிலாயம் என்றழைக்கப்படும் ஸ்ரீ காளஹஸ்தி.webdunia photoWD சிவ பெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலம் என்ற சிறப்புப் பெற்றது இப்புண்ணிய திருத்தலம். சுவர்ணமுகி நதிக்கரையில் மூன்று இராஜ கோபுரங்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயிலில் வாயு ரூபமாக சிவபெருமான் திகழ்வதால் இத்திருத்தலத்திற்கு தனிப்பெருமையுண்டு.திருக்கோயில் புராணம்: இத்திருக்கோயிலில் சிவபெருமான் தன்னை மிகுந்த பக்தியுடன் வணங்கிய மூன்று ஜீவராசிகளையே தனது பெயராக...