Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா சந்திரிக்கா தேவி தாம்!

-அரவிந்த் சுக்லா

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (15:18 IST)
இயற்கையே ஆராதிக்கும் மா சந்திரிக்கா தேவி தாம் திருத்தலம் பலராலும் அறியப்பட்ட ஓரிடம்தான். லக்னோவில் உள்ள பக்‍ஷி கா தலாப் (பறவைகளின் குளம்) என்ற கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

webdunia photoWD
இத்திருத்தலத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவ துர்கா சிலை அமைந்துள்ளது. மஹிசாகர் சங்கமத்தின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில், ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் இங்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டது. அந்த முறை இன்றளவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நினைத்து கோயிலில் சிவப்பு நிறத் துணியைக் கட்டிவிடுகின்றனர். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் கோயிலுக்கு வந்து முடிச்சை அவிழ்த்துவிட்டு, இறைவனுக்கு பிரசாதம் செய்து படைக்கின்றனர். அத்தோடு கோயில் வளாகத்தில் மணிகளையும் கட்டிவிடுகின்றனர்.

மற்றபடி, எந்தவொரு பூஜை முறையும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது, தேங்காய் உடைப்பது உட்பட.

மா சந்திரிக்கா கோயிலில் யாவரும் சமம். இந்த கோயிலின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பவர் அகிலேஷ் சிங் என்பவராவார். மஹிசாகர் சங்கத்தின் முக்கிய பூசாரி ஒரு ஐயர். இங்கு வரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பைரவரை வழிபடுகின்றனர். பலதரப்பட்ட சமுதாயங்களை ஒன்று சேர்க்கும் ஒரு அமைப்பாகவே இந்த கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் கந்தபுராணத்தில் வரும் கடோட்கஜனின் மகன் பார்பரிக்கிற்கும் வழிபாடுகள்
webdunia photoWD
நடத்தப்படுகின்றன. சந்திரிகா தேவி தாம் கோயி‌லி‌ன் வடமேற்கு மற்றும் தென் பகுதிகளை கோமதி ஆறு சூழ்ந்துள்ளது. அதேபோல் மஹிசாகர் சங்கம் கிழக்குப் பக்கத்தில் கோயிலை சூழ்ந்துள்ளது. ஆனால் இதுவரை தண்ணீரால் இப்பகுதிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை. மேலும், இப்பகுதியுடன் அதள பாதாளம் நேரடியாக தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.

இங்கு வரும் ஏராளமான பக்தர்கள் பார்பரிக்கையும் வழிபட்டுவிட்டுச் செல்கின்றனர்.

webdunia photoWD
மஹி சாகர் சங்கத்தில் குளித்த பிறகுதான் இறைவன் சந்திரன் (நிலா) தக்‍ஷ பிரஜாபதியின் சாபத்தில் இருந்து விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புராண காலத்தில் லக்‍ஷ்மண் - ஊர்மிளாவிற்கு பிறந்த சந்திரகேது அடர்ந்த காட்டில் அமாவாசையன்று சிக்கிக் கொண்டு மிகுந்த அச்சத்திற்குள்ளானதாகவும், நவ துர்காவை நினைத்து பூஜித்ததன் பலனாக மா சந்திரிக்காவின் அருள் பெற்று அவனுக்கு பயம் விலகியதாகவும் கூறப்படுகிறது.

மகாபாரதத்திலும், பாண்டவர்கள் திரெளபதியுடன் வனவாசம் மேற்கொண்ட போது இப்பகுதிக்கு வந்துள்ளனர் என்றும் புராணம் கூறுகிறது. மேலும் இந்த கோயிலின் பின்னணியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

அதாவது யுதிஷ்டிரர் மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகிய இரண்டு மன்னர்களுக்கு இடையே நடந்த போரில் ஹன்ஸ்ராஜின் இளைய மகன் சுந்தான்வா பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் அவன் நவ துர்கா பூஜையில் ஈடுபட்டிருந்தான். அதற்கு அவனை தண்டிக்கும் விதத்தில் கொதிக்கும் எண்ணெய் குளத்தில் அவனை போடும்படி தந்தை தீர்ப்பளித்தார். கொதிக்கும் எண்ணெய் குளத்தில் போட்டும் மா சந்திரிக்காவின் சக்தியால் சுந்தான்வா உயிருடன் மீண்டு வந்தான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு இப்பகுதி சுந்தன்வா குண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் யுதிஷ்டிரர் தனது படைப் பரிவாரங்களுடன் தங்கியிருந்த கடகா தற்போது கடகவாசா என்று அறியப்படுகிறது.

இத்திருத்தலத்தில் ஹவன் குண்ட், யாக சாலை, சந்திரிக்கா தேவியின் நீதிமன்றம், பாரிபரிக்
webdunia photoWD
நுழைவாயில், சுந்தர்வா குண்ட், மஹிசாகர் சங்கம் ஆகியன உள்ளன.

இந்திய எழுத்தாளர் மறைந்த அம்ரில் லால் நாகர் என்பவர் கர்வாத் என்ற தனது புத்தகத்தில் கூட இத்தலத்தைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார். அங்கு வாழும் மக்கள், இவ்விடத்தை புராதானச் சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

தென் திருமுல்லைவாயல்: முக்தியும் மோட்சமும் கொடுக்கும் கோயில்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும்!– இன்றைய ராசி பலன்கள்(30.11.2024)!

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Pisces

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | December 2024 Monthly Horoscope| Aquarius | Kumbam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்! | December 2024 Monthly Horoscope| Magaram | Capricorn

Show comments